/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ரூ.26.79 லட்சம் மதிப்பில் திட்ட பணிகள் துவக்கம் ரூ.26.79 லட்சம் மதிப்பில் திட்ட பணிகள் துவக்கம்
ரூ.26.79 லட்சம் மதிப்பில் திட்ட பணிகள் துவக்கம்
ரூ.26.79 லட்சம் மதிப்பில் திட்ட பணிகள் துவக்கம்
ரூ.26.79 லட்சம் மதிப்பில் திட்ட பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 08, 2024 05:33 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி ஒன்றியம், பெரிய முத்துார் பஞ்., பச்சமுத்து நகர் கொல்லக்கொட்டாய் கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2024 - 2025ம் ஆண்டு நிதியில், 4.93 லட்சம் ரூபாய் மதிப்பில் சமத்துவபுரியில், கலவை சுவர் மற்றும் நடைபாதை திட்ட துவக்கவிழா நடந்தது. மேலும், 3.82 லட்சம் ரூபாய் மதிப்பில், பெரியமுத்துார், பச்சகோட்டை பிரபு வீடு முதல் சிவலிங்கம் வீடு வரை சிமென்ட் சாலை, 2.96 லட்சம் ரூபாய் மதிப்பில், துவாரகபுரி காசியம்மாள் வீடு முதல் வி.பி.ஆர்.சி., பில்டிங் வீடு வரை சிமென்ட் சாலை பணி துவக்-கப்பட்டது.
தொடர்ந்து, 6.54 லட்சம் ரூபாய் மதிப்பில், பச்சமுத்து நகர், சர-வணன் வீடு முதல் புவியரசன் வீடு வரை சிமென்ட் சாலை, 4.64 லட்சம் ரூபாய் மதிப்பில், பச்சமுத்து நகர், நடராஜன் வீடு முதல் தாமரைசெல்வி வீடுவரை சிமென்ட் சாலை, 3.88 லட்சம் ரூபாய் மதிப்பில் சின்ன அக்ரஹாரம் காலனி புளுக்கான் கொட்டாய் முதல் அக்ரஹாரம் சாலை வரை சிமென்ட் சாலை என மொத்தம், 26.79 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை, கிருஷ்ண-கிரி, அ.தி.மு.க., - எம்.ஏல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, பஞ்., தலைவர் பானுப்பிரியா நாராயணன், துணைத்தலைவர் ராஜசேகர் உள்பட பலர் பங்கேற்-றனர்.