ADDED : செப் 17, 2025 01:40 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டி நடந்தது. மொத்தம், 96 அணிகள் விளையாடின. இறுதி போட்டியில், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும், அரசம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின.
இதில், 25 - 21, 23 - 25, 25 - 19 என்ற செட் கணக்கில், ஓசூர். ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. தலைமையாசிரியர் வளர்மதி, உடற்கல்வி ஆசிரியர் கனிமொழி, பயிற்சியாளர் தாயுமானவன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்