கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 42. கடந்த, 14ம் தேதி மதியம், 2:00 மணிக்கு, கிருஷ்ணகிரியிலுள்ள ராயக்கோட்டை மேம்பாலம் அருகே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி இளவரசி, 35, புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.
மகாராஜகடை அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முனுசாமி, 53. கடந்த, 11ம் தேதி காலை, 10:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது மனைவி ஷீலா, 39, புகார்படி, மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.