/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு
பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு
பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு
பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு
ADDED : செப் 17, 2025 01:40 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலைக்கல்லுாரி மற்றும் வேளாங்கண்ணி கல்வி குழுமம் சார்பில், அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தன. போட்டிக்கு, வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் தனபால் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, கல்லுாரி சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, போட்டிகளில் வெற்றி பெற்ற, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரை சி.இ.ஓ., (பொ) முனிராஜ் பாராட்டி வாழ்த்தினார். இதில், சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், தலைமை ஆசிரியர்கள் ரமேஷ், நளினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.