பாம்பு கடி குறித்து விழிப்புணர்வு
பாம்பு கடி குறித்து விழிப்புணர்வு
பாம்பு கடி குறித்து விழிப்புணர்வு
ADDED : செப் 20, 2025 02:00 AM
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அரசு மருத்துவமனையில், டாக்டர் கனல்வேந்தன் தலைமையில் பாம்பு கடி குறித்து துாய்மை பணியாளர்கள், கர்ப்பிணிகள், புற நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், கொம்பேறி மூக்கன், சுரட்டைபாம்பு ஆகிய இனங்கள் மட்டுமே அதிக விஷத்தன்மை கொண்டதாக உள்ளது. இதிலிருந்து மக்கள் தங்களை முழுமையாக தற்காத்து கொள்வது, பாம்பு கடித்தவுடன் என்ன செய்வது, அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு கிடைக்கக்கூடிய இலவச சிகிச்சை உள்ளிட்டவை குறித்து பேசினார்.