/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நல்லம்பள்ளியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் போராட்டம் நல்லம்பள்ளியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் போராட்டம்
நல்லம்பள்ளியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் போராட்டம்
நல்லம்பள்ளியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் போராட்டம்
நல்லம்பள்ளியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் போராட்டம்
ADDED : செப் 20, 2025 02:00 AM
நல்லம்பள்ளி, நல்லம்பள்ளியில், குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்ககோரி, பெண்கள் காலி குடங்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பஞ்., இஸ்லாமியர் தெருவில், 70-க்கும் மேற்பட்ட வீடுகளில், 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்கு, மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம், பஞ்., நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை.
இதனால், பள்ளி கல்லுாரி செல்லும் மாணவ-, மாணவியர், பணிக்கு செல்வோர் என அனைவரும் அவதிக்குள்ளாகினர். குடிநீரை முறையாக வழங்க கோரி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், கண்டுகொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பள்ளிவாசல் அருகே, நேற்று காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறினால், நல்லம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகத்தை காலிகுடங்களுடன் முற்றுகையிட்டு, தர்ணா போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.