/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'ஏரோஸ் பேஸ் காரிடார் ஓசூர் வளர்ச்சிக்கு உதவும்' மத்திய அமைச்சர் குமாரசாமி தகவல் 'ஏரோஸ் பேஸ் காரிடார் ஓசூர் வளர்ச்சிக்கு உதவும்' மத்திய அமைச்சர் குமாரசாமி தகவல்
'ஏரோஸ் பேஸ் காரிடார் ஓசூர் வளர்ச்சிக்கு உதவும்' மத்திய அமைச்சர் குமாரசாமி தகவல்
'ஏரோஸ் பேஸ் காரிடார் ஓசூர் வளர்ச்சிக்கு உதவும்' மத்திய அமைச்சர் குமாரசாமி தகவல்
'ஏரோஸ் பேஸ் காரிடார் ஓசூர் வளர்ச்சிக்கு உதவும்' மத்திய அமைச்சர் குமாரசாமி தகவல்
ADDED : செப் 20, 2025 02:00 AM
ஓசூர், 'ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம், ஏரோஸ் பேஸ் காரிடார் ஆகியவை ஓசூரை நல்ல வளர்ச்சிக்கு கொண்டு செல்லும்' என, மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி பேசினார்.
'தி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் இந்தியா' ஓசூர் மைய பிரிவு சார்பில், ஓசூர் மூக்கண்டப்பள்ளி ஹில்ஸ் ஓட்டலில், 'ஓசூர் டெக் எக்ஸ்போ- 2025' என்ற தலைப்பில், 3 நாள் கண்காட்சி நேற்று துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மைய பிரிவு தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். ஓசூர் சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, முன்னாள் எம்.பி., நரசிம்மன், ஓசூர் பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்கள் தலைவர் குமார், தொழிற்சாலை கூட்டமைப்பின் தலைவர் சுந்தரய்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். கண்காட்சியில், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி பேசியதாவது:
ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம், ஏரோஸ் பேஸ் காரிடார் ஆகியவை ஓசூரை நல்ல வளர்ச்சிக்கு கொண்டு செல்லும். புதிய தொழிற்சாலைகள், முதலீடுகள் வரும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இந்த கண்காட்சியில் தொழில்துறை, ஆட்டோமேஷன் கட்டிங் டூல்ஸ், லேசர் மெஷின் ரோபாட்டிக்ஸ், பேக்கிங் அன்ட் பேக்கேஜிங், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்கள், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இயங்கும் நிறுவனங்கள் என மொத்தம், 200க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்துள்ளன. சிறு, குறு மற்றும் பெரிய தொழில் சார்ந்த நிறுவனங்கள், ஆர்டர்களை பெறும் வகையில், நேரடியாக பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளன. கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்லுாரி மாணவ, மாணவியர், புராஜெக்ட் மற்றும் இன்டென்ஷிப் செய்ய ஏதுவாக, நேற்று முதல் கண்காட்சியில் உள்ள பொருட்களை பார்வையிட்டு வருகின்றனர். 3 நாட்களும் கருத்தரங்குகள் நடக்கின்றன. செயலாளர் செல்வராஜ், முன்னாள் தலைவர் அறிவுடை நம்பி, முன்னாள் செயலாளர் முருகேசபாண்டியன், நிர்வாகி கள் நரசிம்மலு, முருகன், கைலாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.