/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பர்கூரில் திட்டப்பணிகளை துவக்கி வைத்து விட்டு நிருபர்களை தவிர்த்த அ.தி.மு.க., - எம்.பி பர்கூரில் திட்டப்பணிகளை துவக்கி வைத்து விட்டு நிருபர்களை தவிர்த்த அ.தி.மு.க., - எம்.பி
பர்கூரில் திட்டப்பணிகளை துவக்கி வைத்து விட்டு நிருபர்களை தவிர்த்த அ.தி.மு.க., - எம்.பி
பர்கூரில் திட்டப்பணிகளை துவக்கி வைத்து விட்டு நிருபர்களை தவிர்த்த அ.தி.மு.க., - எம்.பி
பர்கூரில் திட்டப்பணிகளை துவக்கி வைத்து விட்டு நிருபர்களை தவிர்த்த அ.தி.மு.க., - எம்.பி
ADDED : ஜூன் 18, 2025 01:44 AM
.,
கிருஷ்ணகிரி,
பர்கூர் சுற்றுவட்டாரத்தில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 46.60- லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்க விழா நடந்தது. பர்கூர், அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், கட்சியினர் கலந்து கொண்டனர். பர்கூர், கந்திகுப்பம், பாலிநாயனப்பள்ளி, வரட்டனப்பள்ளி, மிட்டப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில், நாடக மேடை, நிழற்கூடம் ஆகியவற்றை திறந்து வைத்து, ஜெகினிகொள்ளையில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய நிழற்கூடம் அமைக்கும் பூமிபூஜை நிகழ்ச்சியில், ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை கலந்து கொண்டார். அப்போது அவர், அங்கிருந்த நிருபர்களிடம், பேட்டி எல்லாம் வேண்டாம் எனக்கூறி சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட, அ.தி.மு.க.,வை பொருத்தவரை, தம்பிதுரை எம்.பி., மற்றும் கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி என, 2 முக்கிய தலைவர்கள் இருப்பதுடன், அவரது ஆதரவாளர்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். உயர்மட்ட, பா.ஜ., தலைவர்களுடன் தம்பிதுரை நெருக்கமாக இருப்பதாகவும், அதனால் தனக்கு வேண்டியதை செய்து கொள்வதாகவும், கட்சியின் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர் சட்டசபை தொகுதி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., வசம் இருந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக, அதை கிழக்கு மாவட்டத்தில் இணைத்து, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியை, மேற்கு மாவட்டத்தில் இணைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில், தம்பிதுரை எம்.பி., பர்கூரில் களமிறங்க உள்ளதாகவும், அதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனர். இந்நிலையில் தான் நேற்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நிருபர்களை தவிர்த்து சென்றார்.