Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறைகள்

மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறைகள்

மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறைகள்

மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறைகள்

ADDED : ஜூன் 18, 2025 01:29 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் வகையில், கட்டுப்பாட்டு அறைகள் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள மாவட்ட திட்ட அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

இதன் மூலம் உயர் கல்வி சேரும் மாணவ, மாணவியர், பெற்றோர் அற்ற மாணவர்கள், ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், அகதிகள் முகாமில் வாழும் மாணவர்கள், உயர் கல்வி சார்ந்த விழிப்புணர்வு தேவைப்படும் மாணவர்கள், பல்வேறு காரணங்களால் உயர் கல்வி செல்ல இயலாத மாணவர்கள், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்று, ஆதார் அட்டை பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் உயர்கல்வியில் ஏற்படும் குறைபாடுகளை களைந்து, தீர்வு காணும் வகையில், சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 19ம் தேதி (நாளை) காலை, 10:00 மணி முதல் பிற்பகல், 1:00 மணி வரை நடக்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us