/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வெங்கடேஸ்வரா சில்க்ஸில் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுவெங்கடேஸ்வரா சில்க்ஸில் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
வெங்கடேஸ்வரா சில்க்ஸில் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
வெங்கடேஸ்வரா சில்க்ஸில் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
வெங்கடேஸ்வரா சில்க்ஸில் ஆட்டம், பாட்டம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜூன் 25, 2024 02:16 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக்கடையில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலையிலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளிக்கடையில், குழந்தைகளின் திறமைகளை உலகறியச் செய்யும் வகையில், வெயிலோடு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில், குழந்தைகள் பாடுவது, ஜோக் சொல்வது, பேசுவது, கதை சொல்வது, நடனமாடுவது, மேஜிக் செய்வது, அழகாக எழுதுவது என, குழந்தைகளின் தனித்திறமையை, 70 நொடி அளவிற்கு வீடியோ எடுத்து, ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் கடையின் 'வாட்ஸாப்' எண்ணுக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டனர்.
இதில், 100க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர். சிறந்த வீடியோக்களை தேர்வு செய்து, ஸ்ரீவெங்கடேஸ்வரா சிலக்ஸ், 'பேஸ் புக்' பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்த பதிவிற்கு கிடைத்த, 'லைக்' அடிப்படையில், முதல் பரிசாக சைக்கிள், 7 பேருக்கும், ஆறுதல் பரிசாக, 70 பேருக்கு பொம்மைகளும் பரிசாக வழங்கப்பட்டன. பரிசுகளை, ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகைக்கடையின் இயக்குனர்கள் விஷ்ணு, விஷால் ஆகியோர் வழங்கினர்.