/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் சிக்கினர்சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் சிக்கினர்
சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் சிக்கினர்
சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் சிக்கினர்
சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் சிக்கினர்
ADDED : ஜூன் 24, 2024 07:29 AM
போச்சம்பள்ளி: மத்துார் அடுத்த, சின்னஆலேரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், 44; மூக்காகவுண்டனுாரை சேர்ந்த சக்திவேல், 36; இருவரும் அவரவர் வீட்டில் பேரலில் சாராய ஊரல் வைத்திருந்தனர். இருவரும் கூட்டாக சேர்ந்து சாராயம் காய்ச்சுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மத்துார் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட, 150 லிட்டர் சாராய ஊறலை அழித்து, இருவரையும் கைது செய்தனர்.