/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அமுலுக்கு இணையாக ஆவின் பாலுக்கு விலை; தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம் அமுலுக்கு இணையாக ஆவின் பாலுக்கு விலை; தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம்
அமுலுக்கு இணையாக ஆவின் பாலுக்கு விலை; தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம்
அமுலுக்கு இணையாக ஆவின் பாலுக்கு விலை; தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம்
அமுலுக்கு இணையாக ஆவின் பாலுக்கு விலை; தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம்
ADDED : ஜூன் 24, 2024 07:28 AM
ஓசூர்: தமிழக விவசாயிகள் சங்க சூளகிரி வட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட துணை செயலாளர் கண்ணப்பன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அனுமந்தராஜ் வரவேற்றார். மாவட்ட ஆலோசகர் நசீர் அகமது, அடுத்த மாதம், 5 ல் கிருஷ்ணகிரியில் நடக்கும் உழவர் தின பேரணிக்கு வருவது குறித்து, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மாநில தலைவர் ராமகவுண்டர், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில், தமிழக அரசு வனத்துறை நிலத்தில், விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். யானைகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு, 25 லட்சமும், பயிர் சேதத்திற்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். பால் விலை லிட்டருக்கு, 10 ரூபாயும், உற்பத்தி மானியத்தை, 5 ரூபாயும் உயர்த்த வேண்டும். அமுலுக்கு இணையாக ஆவின் பால் விலை மற்றும் பால் பொருட்கள் விலையை உயர்த்த வேண்டும். அமுல் தற்போது ஒரு லிட்டர் பாலை, 72 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அந்த அளவிற்கு ஆவின் பாலையும் விற்க வேண்டும். நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கு, தேசிய, கூட்டுறவு வங்கியிலுள்ள அனைத்து கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றிய நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, மாதப்பன், வேணுகோபால், லட்சுமணன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.