/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கே.ஆர்.பி., அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டம் கே.ஆர்.பி., அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டம்
கே.ஆர்.பி., அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டம்
கே.ஆர்.பி., அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டம்
கே.ஆர்.பி., அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 24, 2024 07:28 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து, விவசாயிகளுடன் கலந்தாலோசனை கூட்டம், அணையிலுள்ள நீர்வளத்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. உதவி செயற்பொறியாளர் அறிவொளி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 48 அடியை தாண்டியுள்ளது. இந்த தண்ணீர் முதல்போக பாசனத்திற்கு போதுமானதாக இருப்பதால், அணையில் இருந்து முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். அதற்கு முன்னதாக, அணையின் வலது மற்றும் இடது புற வாய்க்கால்களை துார்வார வேண்டும். அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடுவதால், மழை காலத்திற்குள் நெல் அறுவடை செய்து விடலாம். எனவே, அணையிலிருந்து, ஜூலை, 5ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேசிய உதவி செயற்பொறியாளர் அறிவொளி, 'விவசாயிகளின் கோரிக்கையை, அரசுக்கு தெரியப்படுத்தி அணையில் இருந்து, 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.