/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 19 ஆண்டுகளாக கேட்டும் கிடைக்கலபட்டாவை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் 19 ஆண்டுகளாக கேட்டும் கிடைக்கலபட்டாவை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
19 ஆண்டுகளாக கேட்டும் கிடைக்கலபட்டாவை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
19 ஆண்டுகளாக கேட்டும் கிடைக்கலபட்டாவை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
19 ஆண்டுகளாக கேட்டும் கிடைக்கலபட்டாவை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 25, 2025 12:43 AM
19 ஆண்டுகளாக கேட்டும் கிடைக்கலபட்டாவை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளி பஞ்., குப்பம் சாலையில், 2001, தி.மு.க., ஆட்சியில், 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் கட்டப்பட்டது. ஆனால், பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதன்பிறகு, அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது. ஆட்சி மாற்றத்தால் திறப்பு விழா
நடத்தப்படாமலும் பணிகள் முற்றிலும் முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டது. கடந்த, 2006ல், தி.மு.க., மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் பணிகள் முடிக்கப்பட்டு, அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் சமத்துவபுரத்தை திறந்து வைத்தார். ஆனால், 19 ஆண்டுகள் கடந்தும், தற்போது வரை ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு, பட்டா வழங்கவில்லை. இதை கண்டித்து நேற்று, சமத்துவபுரத்தில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஜகடை இன்ஸ்பெக்டர் தேவி, காட்டிநாயனப்பள்ளி வி.ஏ.ஓ., இளவரசன் மற்றும் அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்
களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அதிகாரிகளிடம், 'பட்டா கேட்டு பல ஆண்டுகளாக வி.ஏ.ஓ., முதல் கலெக்டர் அலுவலகம் வரை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு வசிப்போருக்கு ஒதுக்கிய நிலத்தை அளந்து கொடுக்க கோரிக்கை விடுத்தோம். அதையும் செய்யவில்லை' என்றனர்.
அவர்களிடம் அதிகாரிகள், 'இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்துள்ளோம். அவர் ஒரு வாரத்தில் விசாரித்து பட்டா மற்றும் அவரவருக்கு ஒதுக்கிய நிலங்கள் அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்' என கூறியதையடுத்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.