/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பொறாமையில் என் மீது அவதுாறுநடவடிக்கைக்கு தி.மு.க., நிர்வாகி புகார் பொறாமையில் என் மீது அவதுாறுநடவடிக்கைக்கு தி.மு.க., நிர்வாகி புகார்
பொறாமையில் என் மீது அவதுாறுநடவடிக்கைக்கு தி.மு.க., நிர்வாகி புகார்
பொறாமையில் என் மீது அவதுாறுநடவடிக்கைக்கு தி.மு.க., நிர்வாகி புகார்
பொறாமையில் என் மீது அவதுாறுநடவடிக்கைக்கு தி.மு.க., நிர்வாகி புகார்
ADDED : மார் 25, 2025 12:43 AM
பொறாமையில் என் மீது அவதுாறுநடவடிக்கைக்கு தி.மு.க., நிர்வாகி புகார்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு நகர பொறுப்பாளர் அஸ்லம், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:நான், கிருஷ்ணகிரியில் ஓட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். கடந்த மாதம் என்னை கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு நகர பொறுப்பாளராக, தி.மு.க., தலைமை அறிவித்தது. இதை பொறுக்க முடியாத சிலர், என் மீது பொறாமை கொண்டு, என்னை பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை கடந்த, 19, 23 தேதிகளில் மொபைல் ஆடியோ உரையாடலாக வைரலாக்கினர். அதில் பேசுபவர்கள், நான் கஞ்சா மற்றும் கள்ளநோட்டுகளை, என் ஓட்டலில் வைத்துள்ளதாகவும், போலீஸ் ரெய்டு நடந்ததாகவும், நான் செய்த சட்டவிரோத செயல்களுக்கு உதவியதாகவும், பேசி உள்ளனர். மேலும் கடந்த, 10 ஆண்டுகளாக என்னிடம் வேலை செய்ததாகவும், தன் பெயர் சந்தோஷ் எனவும் பேசும் அந்த நபர், அரசு தரப்பு சாட்சியாக, நீதிமன்றத்தில் ஆஜராகுவதாகவும் பேசியுள்ளார்.
இந்த, ஆடியோவை வெளியிட்ட நபர் யாரென தெரியவில்லை. யாருடைய துாண்டுதலிலோ, என்னை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து அவதுாறு பரப்புகின்றனர். என் நற்பெயரை கெடுக்கும் வகையில் செயல்படுபவர்கள், யாரென்று கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.