ADDED : மார் 25, 2025 12:44 AM
கால்வாயில் விழுந்தவர் சாவு
சூளகிரி:சூளகிரி அருகே நல்லகானகொத்தப்பள்ளியை சேர்ந்தவர் குர்ரப்பா, 45. கூலித்தொழிலாளி; இவர் அக்கிராமத்தில் தனியார் நிறுவனம் பின்புறமுள்ள கால்வாயில், நேற்று முன்தினம் மதியம் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்தார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
ஓசூர்:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, காங்., கட்சி சார்பில், ஓசூரில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகி சாதிக்கான் தலைமை வகித்தார். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், அர்ச்சகர் புருசோத்தம சர்மா, பாதிரியார் திவாகர், ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி அசேன் ஆகியோர் பேசினர். கிருஷ்ணகிரி தொகுதி, காங்., பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகி மைஜா அக்பர், மாநகராட்சி கவுன்சிலர்கள் பாக்கியலட்சுமி, இந்திராணி உட்பட பலர் பங்கேற்றனர்.