/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தென் மாவட்ட பயணிகளை வஞ்சிக்கும் தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் தென் மாவட்ட பயணிகளை வஞ்சிக்கும் தென்மேற்கு ரயில்வே நிர்வாகம்
தென் மாவட்ட பயணிகளை வஞ்சிக்கும் தென்மேற்கு ரயில்வே நிர்வாகம்
தென் மாவட்ட பயணிகளை வஞ்சிக்கும் தென்மேற்கு ரயில்வே நிர்வாகம்
தென் மாவட்ட பயணிகளை வஞ்சிக்கும் தென்மேற்கு ரயில்வே நிர்வாகம்
ADDED : ஜூன் 01, 2024 02:07 AM
ஓசூர்;தென் மாவட்ட பயணிகளுக்கு தென்மேற்கு ரயில்வே நிர்வாகம், கடும் சிரமத்தை கொடுத்து வருகிறது.
தமிழகத்தின் சேலம், தர்மபுரி, ஓசூர் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், ஐ.டி., ஊழியர்கள், பெங்களூரு மற்றும் அதன் புறநகர் பகுதியில் பணியாற்றுகின்றனர். தினமும் ரயில் மூலமாக சென்று பணியை முடித்து விட்டு, மீண்டும் ரயிலில் வீடு திரும்புகின்றனர். இதற்கு தர்மபுரி - மெஜிஸ்டிக், நாகர்கோவில் - சர்.எம். விஸ்வேஸ்வரய்யா டெர்மினல், சேலம் - யஷ்வந்த்பூர், ஓசூர் - யஷ்வந்த்பூர் ரயில்கள் தொழிலாளர்கள், ஐ.டி., ஊழியர்களுக்கு உதவியாக உள்ளன.
ஆனால் நாகர்கோவில் - சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் தொழிலாளர்கள் மற்றும் தென் மாவட்ட மக்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, பின் பஸ்சில் ஏறி மெஜிஸ்டிக் அல்லது எஸ்.வி.,ரோடு பகுதிக்கு சென்று, அங்கிருந்து மெட்ரோவை பிடித்து வேலைக்கு செல்லவும், தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கும் செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கால விரயம் ஏற்படுகிறது.
நாகர்கோவில் - சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் எக்ஸ்பிரஸ் ரயில், முதலில் கே.எஸ்.ஆர்., பெங்களூரு வரை சென்றது. அப்போது எளிதாக மெட்ரோவை பிடித்து, தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடிந்தது. தென்மாவட்ட மக்களும் பெங்களூரு மற்றும் புறநகர் பகுதிக்கு எளிதாக சென்றனர். ஆனால், விஸ்வேஸ்வரய்யா டெர்மினில் ஸ்டேஷன் வரை மட்டுமே நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதால், பெங்களூருவில் பணி முடிந்து திரும்பும் ஓசூர், தர்மபுரி, சேலம் தொழிலாளர்கள், கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் இருந்து போதிய ரயில் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே மெஜிஸ்டிக் - தர்மபுரி இடையே, மாலையில் இயக்கப்படும் பயணிகள் ரயிலில் கூட்டம் அலைமோதுகிறது. தென் மாவட்ட மக்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என்றால், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிக்க, அரை நாள் விடுமுறை எடுத்தால் தான் முடியும். ஏற்கனவே இருந்தது போல், கே.எஸ்.ஆர்., பெங்களூரு வரை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கினால், தொழிலாளர்கள், தென்மாவட்ட மக்களின் சிரமம் குறையும்.