/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசு 10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசு
10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசு
10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசு
10, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜூன் 01, 2024 02:04 AM
கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி, பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில், பருவதராஜகுல மீனவ சமூகநல அறக்கட்டளை மற்றும் மீன் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டு விழா நடந்தது.
அறக்கட்டளை நிறுவனர் செல்வம் தலைமை வகித்தார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆசிரியர் சொக்கலிங்கம், இளங்கோவன், குமரவடிவேல், ஜெகதீசன், முனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் ஜெயக்குமார், நெடுமாறன், பூங்காவனம், நாகராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முதல் பரிசு, 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 4,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 2,500 ரூபாய், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், 1,000 ரூபாய் ரொக்க பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.