/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் மாநகராட்சியில் பொது சுகாதார குழு கூட்டம் ஓசூர் மாநகராட்சியில் பொது சுகாதார குழு கூட்டம்
ஓசூர் மாநகராட்சியில் பொது சுகாதார குழு கூட்டம்
ஓசூர் மாநகராட்சியில் பொது சுகாதார குழு கூட்டம்
ஓசூர் மாநகராட்சியில் பொது சுகாதார குழு கூட்டம்
ADDED : ஜூலை 26, 2024 03:20 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு ஆயத்த கூட்டம் முதல்-முறையாக நேற்று நடந்தது. பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மாநகர நல அலுவலர் பிரபா-கரன் முன்னிலை வகித்தார். இதில், ஓசூர் அரசு மருத்துவமனை மற்றும் 5 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலி-யர்கள், சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம், பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டும். ஓசூர் அரசு மருத்துவமனை முன் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரிக்கைகள் வைத்தனர்.
அதை நிறைவேற்றி தருவதாக தெரிவித்த, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் பேசியதாவது:
ஓசூர் பஸ் ஸ்டாண்டிலுள்ள தாய்மார்கள் பாலுாட்டும் அறையை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். தியேட்டர்கள், தனியார் மருத்துவமனைகளில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க சிரமப்படுவதால் அங்கு, பாலுாட்டும் அறை அமைக்க வேண்டும். துாய்மை திட்டத்தில் வீடு, கடைக-ளுக்கு குப்பை சுத்தம் செய்யும் வரி போடப்படுகிறது. அதை, 6 ஆண்டுகள் முன் தேதியிட்டு கட்ட, மாநகராட்சி கூறுவதால் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்-றனர். அதை எளிமை படுத்த வேண்டும். ஓசூரில் டெங்கு பர-வாமல் தடுக்க, டெங்கு கொசு புழுக்களை ஒழித்து, வாரம் இரு-முறை கொசு மருந்து அடிக்க வேண்டும். திருமண மண்டபங்கள், தியேட்டர்களில் கழிவறைகளை சரியான முறையில் பராமரிக்க, தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கைக்கேற்ப கழிவறைகள் உள்ளதை ஆய்வு செய்ய வேண்டும். ஓசூர் மாநக-ராட்சியிலுள்ள, 20,000 தெரு நாய்களில், 606 நாய்களுக்கு கருத்-தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் மோசின் தாஜ், ஆறுமுகம், லட்சுமி, சில்பா மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.