Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ டாஸ்மாக் இடமாற்றம் கோரி பொதுமக்கள் போராட்டம்

டாஸ்மாக் இடமாற்றம் கோரி பொதுமக்கள் போராட்டம்

டாஸ்மாக் இடமாற்றம் கோரி பொதுமக்கள் போராட்டம்

டாஸ்மாக் இடமாற்றம் கோரி பொதுமக்கள் போராட்டம்

ADDED : ஜூலை 26, 2024 03:19 AM


Google News
கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அடுத்த நாட்றாம்பாளையத்தில், குறுகிய சாலை பகுதியில் டாஸ்மாக் அமைந்துள்ளது. அப்பகுதியில் அரசு அலுவ-லகங்கள், பள்ளிகள் உள்ளன. எனவே, இங்குள்ள டாஸ்மாக் கடையை இடம்மாற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பல்வேறு மனுக்கள் அளித்தனர்.

இதையடுத்து டாஸ்மாக் கடை இயங்கும் இடத்தின் அருகி-லேயே, கடையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் நேற்று காலை, 7:00 மணியளவில் கூசப்பன்-கொட்டாய் பகுதி மக்கள், நாட்றாம்பாளையம் - ஒகேனக்கல் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அஞ்-செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us