/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வங்கி ஏ.டி.எம்., மையங்களில் வாட்ச்மேன் போட அறிவுறுத்தல் வங்கி ஏ.டி.எம்., மையங்களில் வாட்ச்மேன் போட அறிவுறுத்தல்
வங்கி ஏ.டி.எம்., மையங்களில் வாட்ச்மேன் போட அறிவுறுத்தல்
வங்கி ஏ.டி.எம்., மையங்களில் வாட்ச்மேன் போட அறிவுறுத்தல்
வங்கி ஏ.டி.எம்., மையங்களில் வாட்ச்மேன் போட அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 26, 2024 03:21 AM
கிருஷ்ணகிரி: ஓசூரில், வங்கி மேலாளர்கள், துணை மேலாளர்கள், ஏ.டி.எம்., பராமரிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் தலைமை வகித்தார்.
மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பேசுகையில், ''வங்கி மேலா-ளர்கள், தங்கள் வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்கள், அலாரங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தினமும் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து வங்கிகளிலும், 'சிசிடிவி' உள்-ளிட்ட அம்சங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதேபோல அனைத்து ஏ.டி.எம்.,களிலும் வாட்ச்மேன் நியமிக்க வேண்டும். இம்மாத துவக்கத்தில் வாட்ச்மேன் இல்லாத ஏ.டி.எம்., உடைக்-கப்பட்டு திருட்டு நடந்துள்ளது. அனைத்து வங்கிளும் பாதுகாப்பு அம்சங்களுடன், ஏ.டி.எம்., சென்டர்களில் வாட்ச்மேன்கள் கட்-டாயம் இருக்கும் வகையில் பார்த்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
சூளகிரி, ஓசூர் சிப்காட், நல்லுார் இன்ஸ்பெக்டர்கள், வங்கி மேலாளர்கள், ஊழியர்கள் உட்பட, 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.