/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.16.30 லட்சம் மோசடி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.16.30 லட்சம் மோசடி
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.16.30 லட்சம் மோசடி
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.16.30 லட்சம் மோசடி
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.16.30 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 22, 2024 12:12 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே குருபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார், 38, தனியார் நிறுவன ஊழியர்; கடந்த, மே, 15ல் இவரது மொபைல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
அதில், குறிப்பிட்ட சில பங்குகளில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய குமார், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய குறிப்பிட்ட சில வங்கி கணக்குகளுக்கு, 16.30 லட்சம் ரூபாயை அனுப்பினார்.
அதன் பிறகு, எந்த தகவலும் வரவில்லை. சந்தேகமடைந்த அவர், அவரது மொபைல் போனுக்கு வந்த தகவலில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டபோது அது, 'சுவிட்ச் ஆப்' என வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர், கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, இன்ஸ்பெக்டர் கவிதா விசாரித்து வருகிறார்.