ADDED : ஜூலை 22, 2024 12:11 PM
ஓசூர்: ராயக்கோட்டை அருகே நடுக்கலாம்பட்டியில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று நேற்று வெறிப்பிடித்து, அப்பகுதி மக்களை விரட்டி கடிக்க முயன்றது. மேலும், கருக்கம்பட்டியை சேர்ந்த, 3 வயது ஆண் குழந்தை நாய் கடித்து குதறியது. அங்கிருந்து தொட்டமெட்டரை சென்ற நாய், 3 வயது பெண் குழந்தை மற்றும் 9 வயது சிறுமி, பெரியர்வர்கள் சிலரை கடித்தது.
பந்தாரப்பள்ளியில், 11 வயது சிறுமியை கடித்து குதறியது. மொத்தம், 8 பேர் நாயிடம் கடி வாங்கிய நிலையில், 7 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும், கருக்கம்பட்டியை சேர்ந்த, 3 வயது ஆண் குழந்தை, பாலக்கோடு அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். வெறிபிடித்த தெருநாயை மக்கள் அடித்து கொன்றனர்.