Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 1,008 வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம்

1,008 வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம்

1,008 வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம்

1,008 வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம்

ADDED : ஜூலை 26, 2024 10:45 PM


Google News
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அண்ணா நகரில் பழமையான ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இதன் வளாகத்தில் சக்ர விநாயகர், ஞான முருகன், துர்க்கையம்மன், நவக்கிரகம் போன்ற சன்னதிகள் உள்ளன. ஆண்டுதோறும் ஆடி மாதத்தையொட்டி, இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.

இந்தாண்டு, இரண்டாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், 1,008 வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வேலன் அடிமை சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us