Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ உத்தனப்பள்ளியில் ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

உத்தனப்பள்ளியில் ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

உத்தனப்பள்ளியில் ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

உத்தனப்பள்ளியில் ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

ADDED : ஜூலை 26, 2024 10:45 PM


Google News
ஓசூர்:உத்தனப்பள்ளியில், ஆம்புலன்ஸ் வாகன சேவை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே, ஐ போன் உதிரிபாகங்கள் தயார் செய்யும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 15,000 தொழிலாளர்கள் தங்கும் வகையில், டாடா நிறுவனம் குடியிருப்புகளை கட்டி வருகிறது.

மேலும் உத்தனப்பள்ளியை சுற்றி, ஐந்தாவது சிப்காட் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. அதனால், உத்தனப்பள்ளியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, மாவட்ட தீயணைப்புத்துறை ஏற்கனவே அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.

தர்மபுரியில் இருந்து, கர்நாடகா மாநிலம், நெரலுார் வரை செல்லும் நான்கு வழிச்சாலை, இப்பகுதி வழியாக தான் செல்கிறது. உத்தனப்பள்ளியை சுற்றி, 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.

இப்பகுதியில் விபத்து, கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி, மாரடைப்பு மற்றும் இதர நோய்களால் பாதிக்கப்படும் மக்களை அவசரமாக, ஓசூர் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு தான் அழைத்து செல்ல வேண்டும்.

ஆனால், உத்தனப்பள்ளியில் ஆம்புலன்ஸ் வசதி கிடையாது. அதனால் அவசர காலங்களில், 108 ஆம்புலன்சிற்கு மக்கள் போன் செய்தால், 10 கி.மீ., தொலைவில் உள்ள சூளகிரி அல்லது கெலமங்கலத்தில் இருந்து தான் ஆம்புலன்ஸ்கள் வர வேண்டும்.

அந்த நேரத்தில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேறு ஏதாவது நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தால், 20 கி.மீ., தொலைவில் உள்ள ஓசூர் அல்லது 18 கி.மீ., தொலைவில் உள்ள ராயக்கோட்டையில் இருந்து தான் ஆம்புலன்ஸ்கள் வர வேண்டியுள்ளது. அதற்குள் உயிரிழப்புகள் ஏற்பட்டு விடுகின்றன.

எனவே, வேகமாக வளர்ந்து வரும் உத்தனப்பள்ளியில், 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை வழங்க வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us