/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசு ஆடவர் கல்லுாரியில் அரங்கு அமைப்பு பணி கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசு ஆடவர் கல்லுாரியில் அரங்கு அமைப்பு பணி
கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசு ஆடவர் கல்லுாரியில் அரங்கு அமைப்பு பணி
கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசு ஆடவர் கல்லுாரியில் அரங்கு அமைப்பு பணி
கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசு ஆடவர் கல்லுாரியில் அரங்கு அமைப்பு பணி
ADDED : ஜூலை 19, 2024 02:06 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில், அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்த, அரங்கு அமைக்கும் பணி நடக்கி-றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவில் மா விவசாயம் நடக்கி-றது. மா விவசாயிகளை ஊக்குவிக்க கடந்த, 1992 முதல் கிருஷ்-ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மாங்கனி கண்காட்சி நடத்துவதில் பல்-வேறு குழப்பங்களால் தாமதம் ஏற்பட்டது.
3 முறை இடமாற்றம்
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாங்கனி கண்காட்சி நடத்துவது வழக்கம். அங்கு கண்காட்சி நடத்த எதிர்ப்பால், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே தனியார் மைதா-னத்தில் நடத்த முடிவு செய்து, மாவட்ட கலெக்டர் சரயுவும் இடத்தை ஆய்வு செய்தார். ஆனால் அந்த இடம் பைபாஸ் அருகில் இருப்பதால், விபத்து அதிகரிக்கவும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாங்-கனி கண்காட்சியை, பெத்தனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, சென்னை சாலையிலுள்ள கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்-லுாரி மைதானத்தில் நடத்த முடிவு செய்து, அரங்குகள் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.
முடிவாகாத தேதி
இது குறித்து விவசாயிகள், பொதுமக்கள் கூறுகையில், 'மாங்-கனி சீசன் முடிந்தும், பல்வேறு குழப்பங்களுக்கு பிறகு, மாங்கனி கண்காட்சி நடத்த ஏற்பாடு நடக்கிறது. ஆனால், தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அரங்குகள், விளையாட்டு அரங்கம், உணவு உள்ளிட்டவைகளுக்கான ஒப்பந்தம் முழுவதுமாக முடிய-வில்லை. தேதியும் இறுதி செய்யப்படவில்லை. மா விவசாயிக-ளுக்காக நடத்தப்படும் கண்காட்சியை, முற்றிலும் வருவாய்க்காக நடத்தப்படும் நிகழ்ச்சியாக மாற்றியுள்ளனர். மாங்கனி கண்காட்சி நடத்த, அரசுக்கு சொந்தமாக நகருக்குள் உள்ள இடத்தை தேர்வு செய்யாதது வருத்தமளிக்கிறது' என்றனர்.