ADDED : ஜூலை 19, 2024 02:07 AM
ஓசூர்: சூளகிரி கீழ்தெருவை சேர்ந்தவர் ஜீவிதா, 19; தனியார் மருத்து-வமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த, 15ல், மருத்துவ-மனைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். அவரை எங்கு தேடியும் காணவில்லை.
இது குறித்து ஜீவிதாவின் பெற்றோர், சூளகிரி போலீசில் புகார-ளித்தனர். அதில், வள்ளுவர்புரத்தை சேர்ந்த சூர்யகாந்த், 20 என்ற வாலிபர் மீது, சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்-படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
* கிருஷ்ணகிரி அடுத்த பாலக்குறியை சேர்ந்தவர் லட்சுமி, 19; கடந்த, 16ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. லட்சுமியின் சகோதரர் திருப்பதி புகார் படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
கிரானைட் கற்கள் கடத்தல்
ஓசூர், ஜூலை 19-
கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு தாசில்தார் கோகுல கண்ணன் மற்றும் அதிகாரிகள் உத்தனப்பள்ளி அருகே, ஓபேபா-ளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில் கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. கோகுல கண்ணன் புகார் படி, உத்தனப்பள்ளி போலீசார், லாரியை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.