ADDED : ஜூலை 19, 2024 01:35 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் தாலுகாவில், 'உங்-களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் முகாமில், நேற்று காலை டி.ஆர்.ஓ., சாதனைகுறள் தலைமையில், கெலமங்கலம் கால்-நடை மருத்துவமனை, ரேஷன் கடைகள், தேர்வு நிலை பேரூ-ராட்சி அலுவலகம், குட்டி ஜெக்கேரி உருது பள்ளி, விருப்பாச்சி நகர் ஆதிதிராவிடர் காலனி போன்ற இடங்களில் ஆய்வு மேற்-கொண்டனர்.
இதில், தேன்கனிக்கோட்டை தனி தாசில்தார் மோகன்தாஸ், கெலமங்கலம் ஆர்.ஐ., முனியப்பன், பேரூராட்சி அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி உதவி அலுவலர் சீனி-வாசன் உள்பட பலர் உடன் இருந்தனர்