/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கி.கிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் 5ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கி.கிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் 5ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
கி.கிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் 5ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
கி.கிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் 5ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
கி.கிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் 5ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ADDED : ஜூலை 19, 2024 02:09 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலைக் கல்லுாரியில் வரும், 22ல் மாணவர் சேர்க்கைக்கான, 5ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.
இது குறித்து, கல்லுாரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லுாரியில், 2024-2025-ம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கு, 5ம் கட்ட கலந்தாய்வு விபரம், www.gacmenkrishnagiri.org என்ற இணையத-ளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி., கணிதம், இயற்-பியல், வேதியியல், கணினி அறிவியல், புள்ளியியல், தாவர-வியல், விலங்கியல், நுண்ணுயிரியல் ஆகிய அனைத்து அறி-வியல் பாடப்பிரிவுகளுக்கும் பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ., வரலாறு, பொருளியல் ஆகிய கலை பாட பிரிவுகளுக்கும் பி.ஏ., தமிழ்., பி.லிட்., - தமிழ், பி.ஏ.,- ஆங்கிலம் ஆகிய மொழி பாட பிரிவுக-ளுக்கும் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் விண்ணப்பித்த அனைவருக்கும், ஜூலை 22-ல் கலந்தாய்வு நடக்கிறது. தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களுக்கு, மின்னஞ்சல் வாயி-லாக கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விபரங்கள் அனுப்பப்-பட்டுள்ளன.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், தேவையான சான்றிதழ்க-ளுடன், கலைப்பிரிவுக்கு, 2,795 ரூபாய், அறிவியல் பிரிவிற்கு, 2,815, கணினி அறிவியல் பிரிவிற்கு, 1,915 ரூபாய் சேர்க்கை கட்-டணமாக செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்-கான இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கு முன்னுரிமை அளித்தும், தகுதியுள்ள பிற இன மாணவர்களுக்கு இனச்சுழற்சி மாற்றம் செய்தும் மதிப்பெண் அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்-படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.