/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 நாட்களாக சாரல் மழை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 நாட்களாக சாரல் மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 நாட்களாக சாரல் மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 நாட்களாக சாரல் மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 நாட்களாக சாரல் மழை
ADDED : ஜூலை 19, 2024 02:08 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கடந்த, 3 நாட்களுக்கு முன்பு அறிவித்-தது. ஆனால் கடந்த, 4 நாட்களாக மாவட்டத்தில் பலத்த மழை-யின்றி, லேசான சாரல் மழை மட்டுமே பெய்து வருவதால், மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேற்றும், காலை முதல் வானம் இருண்டு மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிக-பட்சமாக தேன்கனிக்கோட்டையில், 12 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதேபோல், தளி, 10, நெடுங்கல், 7.60, போச்சம்-பள்ளி, 6.50, கே.ஆர்.பி., அணை, 6.40, ராயக்கோட்டை, 5, சூளகிரி, 4, ஓசூர், 3.70, கிருஷ்ணகிரி, 3.20, அஞ்செட்டி, 2.40, பாரூர், 2.20, ஊத்தங்கரை, சின்னார் அணை, 2, என மொத்தம், 74.20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.