/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பயிர் காப்பீடு செய்ய விழிப்புணர்வு முகாம் பயிர் காப்பீடு செய்ய விழிப்புணர்வு முகாம்
பயிர் காப்பீடு செய்ய விழிப்புணர்வு முகாம்
பயிர் காப்பீடு செய்ய விழிப்புணர்வு முகாம்
பயிர் காப்பீடு செய்ய விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 19, 2024 02:09 AM
கிருஷ்ணகிரி: காரீப் பருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வது குறித்த, விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி கிரா-மத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவசங்கரி தலைமை வகித்து பேசினார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில், பாலேப்பள்ளி, பர்கூர், போச்சம்பள்ளி, மத்துார், நாகரசம்பட்டி பிர்காவிற்கு உட்-பட்ட கிராமங்களில், காரீப் பருவத்திற்கான நெல், ராகி, மக்காச்-சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை மற்றும் பருத்தி போன்ற அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு பயிர் காப்பீடு விருப்பத்தின் படி செய்து கொள்ளலாம். பாலேப்-பள்ளி மற்றும் மத்துார் பிர்கா உட்பட்ட கிராமங்களில், நெற் பயி-ருக்கு வரும், 31, பர்கூர், போச்சம்பள்ளி, மத்துார் பிர்காவிற்கு வரும் ஆக., 16, பாலேப்பள்ளி, நாகரசம்பட்டி மற்றும் போச்சம்-பள்ளி பிர்காவிற்கு உட்பட்ட கிராமங்களில் பயிரிட்டுள்ள பருத்-திக்கு வரும் செப்., 30க்குள் பதிவு செய்து இழப்பீடு பெறலாம். பிர்கா வாரியாக பயிர் அறுவடை சோதனை செய்து, இழப்பின் அளவை கணித்து பயிர் காப்பீடு வழங்கப்படும் என, வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர்.