/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வெவ்வேறு இடங்களில் 3 இளம்பெண்கள் மாயம் வெவ்வேறு இடங்களில் 3 இளம்பெண்கள் மாயம்
வெவ்வேறு இடங்களில் 3 இளம்பெண்கள் மாயம்
வெவ்வேறு இடங்களில் 3 இளம்பெண்கள் மாயம்
வெவ்வேறு இடங்களில் 3 இளம்பெண்கள் மாயம்
ADDED : ஜூலை 14, 2024 02:14 AM
கிருஷ்ணகிரி: மத்துாரை சேர்ந்தவர் மஞ்சுபிரியா, 27; கடந்த, 11ல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் ரமேஷ், மத்துார் போலீசில் புகாரளித்தார். அதில் மத்துாரை சேர்ந்த கூலித்தொழிலாளி குபேந்திரன், 22, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
* சிங்காரப்பேட்டை அடுத்த பி.சி.நாகரசம்பட்டியை சேர்ந்தவர் சிந்து, 25; கடந்த, 9ல் வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. சிந்துவின் கணவர் பாலமுருகன், 25, நேற்று முன்தினம் சிங்காரப்பேட்டை போலீசில் புகாரளித்தார். அதில், சென்னையை சேர்ந்த வாலிபர் விக்கி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
* கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகர், 8வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சமீனா, 22, பட்டதாரி; இவர், வேலைக்கு செல்ல வேண்டுமென வீட்டில் கூறியுள்ளார். அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனமுடைந்த சமீனா கடந்த, 9ல் வீட்டிலிருந்து மாயமானார். அவரது பெற்றோர் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.