Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மேம்பால தடுப்பு சுவரில் மோதிய லாரி

மேம்பால தடுப்பு சுவரில் மோதிய லாரி

மேம்பால தடுப்பு சுவரில் மோதிய லாரி

மேம்பால தடுப்பு சுவரில் மோதிய லாரி

ADDED : ஜூலை 14, 2024 02:13 AM


Google News
ஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரும்பு பொருட்களை ஏற்றிய ஈச்சர் லாரி நேற்று அதிகாலை சென்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பஸ் ஸ்டாண்ட் எதிரே, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்ற போது, தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளா-னது. இதில், லாரியை ஓட்டிச் சென்ற மதுரையை சேர்ந்த சூர்யா, 26, என்பவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்-தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியின் முன்பக்க டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்-பாட்டை இழந்த லாரி, மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி-யது தெரிந்தது. சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us