ADDED : ஜூலை 20, 2024 07:35 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்-தது. சேலம் மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) லதா தலைமை வகித்தார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மோனிஷா முன்னிலை வகித்தார்.
முகாமில் டெல்டா, அசோக் லேலண்ட் உள்ளிட்ட, 14 தனியார் நிறுவனங்கள் கலந்து ஆட்களை தேர்வு செய்தது. நேர்முக தேர்வு செய்யப்பட்டதில், 72 பேருக்கு சேலம் மண்டல இணை இயக்-குனர் லதா பணி நியமன ஆணைகள் வழங்கி பேசியதாவது:
இன்று நடந்த முகாமில் கலந்து கொண்ட 238 பேரில், 72 பேர் பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தேர்வாளர்கள் வசதிக்காக, 5,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நுாலக வசதி ஏற்படுத்தப்பட்-டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.