/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் மாநகராட்சி கணக்கு குழு கூட்டம் ரூ.246 கோடி வரவு, செலவு கணக்கு சமர்ப்பிப்பு ஓசூர் மாநகராட்சி கணக்கு குழு கூட்டம் ரூ.246 கோடி வரவு, செலவு கணக்கு சமர்ப்பிப்பு
ஓசூர் மாநகராட்சி கணக்கு குழு கூட்டம் ரூ.246 கோடி வரவு, செலவு கணக்கு சமர்ப்பிப்பு
ஓசூர் மாநகராட்சி கணக்கு குழு கூட்டம் ரூ.246 கோடி வரவு, செலவு கணக்கு சமர்ப்பிப்பு
ஓசூர் மாநகராட்சி கணக்கு குழு கூட்டம் ரூ.246 கோடி வரவு, செலவு கணக்கு சமர்ப்பிப்பு
ADDED : ஜூலை 20, 2024 07:35 AM
ஓசூர் : ஓசூர் மாநகராட்சி கணக்கு குழு கூட்டம், தலைவர் பார்வதி நாகராஜ் தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் (கணக்கு) கும-ரேசன் முன்னிலை வகித்தார். கணக்கு அலுவலர் சரவணன் வர-வேற்றார்.
கூட்டத்தில், 2024 - 25 ம் ஆண்டுக்கான வரவு, செலவு உத்தேச விபரங்கள் அடங்கிய பட்டியல் தாக்கல் செய்யப்-பட்டன. அதன்படி, வருவாய், குடிநீர், கல்வி நிதி மற்றும் திட்-டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மூலமாக நடப்பாண்டு மாநக-ராட்சிக்கு, 246 கோடியே, 13 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாய் வருவாய் வரும் என கணக்கிடப்பட்டது.அலுவலர்கள், ஊழியர்களுக்கு ஊதியம், வளர்ச்சி திட்ட செல-வுகள் என மொத்தம், 245 கோடியே, 88 லட்சத்து, 73 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும், 25.09 லட்சம் ரூபாய் கையிருப்பு இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டது. கவுன்சிலர்கள் ரஜி-னிகாந்த், மல்லிகா தேவராஜ், பாக்கியலட்சுமி,
மாநகராட்சி உதவியாளர் சத்தியா உட்பட பலர் பங்கேற்றனர்.