ADDED : ஜூலை 20, 2024 07:35 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சர்வதேச நீதி தினம் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான, சுமதி சாய் பிரியா தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து நீதிபதிகள், பள்ளி மாணவ மாணவியர், வழக்கறிஞர்கள். மற்றும் நீதிமன்ற ஊழியர்களுடன் மனித சங்-கிலி நடைபயணம் மேற்கொண்டு சர்வதேச நீதி தினத்தில் விழிப்-புணர்வை ஏற்படுத்தினர். விழிப்புணர்வில் பங்கு பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பேனா மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
வழக்கறிஞர் சங்க தலைவர் கோவிந்தராஜூலு, செயலாளர்
சத்தியநாராயணன், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.