ADDED : மார் 28, 2025 01:43 AM
பெண்களுக்கு நலத்திட்ட உதவி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் கடந்த, 2012 முதல் இயங்கி வரும், ஞான தீப சேவை மையம், பெண்களின் வாழ்வு, சுகாதாரம், பெண் கல்வி மற்றும் மேம்பாட்டிற்காக, அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில், நேற்று உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், ஆடிட்டர் வடிவேல், பள்ளிசாரா கல்வி இயக்க மாநில தலைவர் செந்தில் மற்றும் மோகன்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்ட, 50க்கும் மேற்பட்ட ஏழை பெண்களுக்கு, உணவு, உடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், சேவை மைய தலைவர் கீதா, செயலாளர் தமிழ்மணி, இணை செயலாளர் கீதா, பொருளாளர் கஸ்துாரி, துணைத்தலைவர் அமுதா உள்பட பலர் பங்கேற்றனர். நிறுவன திட்ட மேலாளர் இருதயமேரி நன்றி கூறினார்.