/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பது குறித்துவேளாண் கல்லுாரி மாணவியர் பயிற்சி விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பது குறித்துவேளாண் கல்லுாரி மாணவியர் பயிற்சி
விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பது குறித்துவேளாண் கல்லுாரி மாணவியர் பயிற்சி
விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பது குறித்துவேளாண் கல்லுாரி மாணவியர் பயிற்சி
விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பது குறித்துவேளாண் கல்லுாரி மாணவியர் பயிற்சி
ADDED : மார் 28, 2025 01:43 AM
விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பது குறித்துவேளாண் கல்லுாரி மாணவியர் பயிற்சி
கிருஷ்ணகிரி:உலகளவில், 5 வகையான தேனீக்கள் உள்ளன. அவற்றில், 3 வகையான தேனீக்கள் இந்தியாவில் வளர்க்கப்படுகின்றன. அதிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தட்பவெப்ப நிலைக்கு பொருத்தமானவை இந்திய தேனீயாகும். இந்த தேனீயை வளர்ப்பதன் மூலம், விவசாயிகள் பயிர்கள் வளர்ப்பதற்கான பருவம் தவறிய காலங்களில், வருவாய் ஈட்டலாம். அதன்படி, ஓசூர் அதியமான் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த மாணவியர், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் பன்னி அள்ளி பஞ்., குட்டப்பட்டி கிராமத்தில், தேனீக்களை, எவ்வாறு பராமரித்து மேலாண்மை செய்ய வேண்டும் என்பது குறித்த பயிற்சியை விவசாயிகளுக்கு அளித்தனர்.
அதில், தேனீப்பெட்டிகளை தென்னந்தோப்பில் வைத்து, பெட்டிகளை தாங்கி நிற்கும் இரும்புக் கால்களின் மீது கிரீஸ் தடவி வைக்க வேண்டும். இதனால், தேனீக்களை உண்ணவரும் எறும்புகள் போன்ற பூச்சிகளின் தாக்கத்தை தவிர்க்கலாம். மேலும், தேனீக்களை முக்கியமாக தாக்கும் அந்துப்பூச்சிகளின் தாக்கத்தினால், மெழுகின் மீது ஏற்படும் சிலந்தி வலைப்போன்ற நுால்களை தடுக்க வாரம் ஒரு முறை அடிப்பெட்டியை சுத்தம் செய்ய வேண்டும். தேனீக்களுக்கு உணவு கிடைக்காத காலங்களில், சர்க்கரை மற்றும் தண்ணீரை, 1:1 என்ற விகிதத்தில் காயவைத்து, தேனீக்களுக்கு உணவளித்து, தேனை பெறலாம் என விளக்கமளித்தனர்.
இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.