/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரி அரசு கல்லுாரி அருகேபஸ்கள் நின்று செல்ல கோரிக்கை கிருஷ்ணகிரி அரசு கல்லுாரி அருகேபஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
கிருஷ்ணகிரி அரசு கல்லுாரி அருகேபஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
கிருஷ்ணகிரி அரசு கல்லுாரி அருகேபஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
கிருஷ்ணகிரி அரசு கல்லுாரி அருகேபஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
ADDED : மார் 28, 2025 01:43 AM
கிருஷ்ணகிரி அரசு கல்லுாரி அருகேபஸ்கள் நின்று செல்ல கோரிக்கை
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்துார், வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் வேலுார் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், மேம்பாலத்தின் மீது செல்லாமல், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்வது வழக்கம். ஆனால் கடந்த, 3 ஆண்டுகளாக காலை மற்றும் மாலை என, இரண்டு நேரம் மட்டுமே, பஸ்கள் இங்கு நின்று செல்கின்றன. மற்ற நேரங்களில் மேம்பாலத்தின் மீது சென்று விடுகின்றன. இதனால், அரசு ஆடவர் கலைக்கல்லுாரி அருகே, ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பஸ்சிற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள், மாவட்ட கலெக்டர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழகம் என, பல இடங்களில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது வரை, பஸ்கள் மேம்பாலத்தின் மீதே சென்று வருகின்றன. இதனால் மேம்பாலத்தின் கீழ், பஸ்சிற்காக காத்திருப்பவர்கள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், அரசு ஆடவர் கலைக்கல்லுாரி அருகே, சென்னை சாலையில் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் நின்று செல்ல, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.