/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பால் உற்பத்தி மானியத்தை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் பால் உற்பத்தி மானியத்தை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
பால் உற்பத்தி மானியத்தை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
பால் உற்பத்தி மானியத்தை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
பால் உற்பத்தி மானியத்தை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 28, 2025 01:44 AM
பால் உற்பத்தி மானியத்தை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:தமிழக பால் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் சங்கத்தினர், கிருஷ்ணகிரி ஆவின்பால் கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்தார்.
இதில், பால் உற்பத்தி மானியம், 4 மாதங்களாக வழங்கவில்லை. பால் பணம் மற்றும் பால் மானியம், தொடக்க சங்கத்தின் மூலமே வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலை கூடுதலாக, 10 ரூபாய் உயர்த்தியும், மானியம், 6 ரூபாய் உயர்த்தியும் வழங்க வேண்டும். அனைத்து பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கறவை மாடுகளுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை கொண்டு வர வேண்டும். சங்கத்தின் விளிம்புதொகை, 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். சங்க நிர்வாகிகளின் சம்பளத்தை, அரசே வழங்க வேண்டும். சத்துணவில் ஆவின் பாலும், ரேஷனில் ஆவின் பொருட்களும் வழங்க வேண்டும். தீவனத்திற்கு, 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். கால்கோமாரி அம்மை நோயால் பாதிக்கப்படும் மாடுகளுக்கும், இன்சூரன்ஸ் திட்டத்தை கொண்டு வர வேண்டும். கிருஷ்ணகிரி ஆவின் பால் பண்ணையில், கால்நடை தீவன தொழிற்சாலை தொடங்கி, விவசாயிகளுக்கு சலுகை விலையில் தீவனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், இக்கோரிக்கைகள் அடங்கிய மனுவை, ஆவின் பால் கூட்டுறவு ஒன்றிய பொதுமேலாளரிடம் வழங்கினர்.
இதில், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட ஆலோசகர் நசீர்அகமத், மாவட்ட செயலாளர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.