ADDED : மார் 23, 2025 01:06 AM
போலி டாக்டர் தலைமறைவு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு பகுதியில் மருத்துவம் படிக்காமல் ஒருவர், கிளீனிக் நடத்தி வருவதாக, ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் எழிலரசிக்கு புகார் சென்றது. அவர், மருத்துவ அலுவலர்களுடன் நேற்று முன்தினம் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது, அப்பகுதியில் பி.பி.டி., ஹெல்த் கேர் சென்டர் என்ற பெயரில் கிளீனிக் இருந்ததும், அதில் முறையாக மருத்துவம் படிக்காத காரப்பட்டு, சின்ன
சாமி தெருவை சேர்ந்த விக்னேஷ், 30, என்பவர், அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. புகார் படி,
ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிந்து, விக்னேஷை தேடி வருகின்றனர்.