/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சி.எஸ்.ஆர்., நிதியை பயன்படுத்த நிறுவனங்களுக்கு அழைப்பு சி.எஸ்.ஆர்., நிதியை பயன்படுத்த நிறுவனங்களுக்கு அழைப்பு
சி.எஸ்.ஆர்., நிதியை பயன்படுத்த நிறுவனங்களுக்கு அழைப்பு
சி.எஸ்.ஆர்., நிதியை பயன்படுத்த நிறுவனங்களுக்கு அழைப்பு
சி.எஸ்.ஆர்., நிதியை பயன்படுத்த நிறுவனங்களுக்கு அழைப்பு
ADDED : மார் 23, 2025 01:05 AM
சி.எஸ்.ஆர்., நிதியை பயன்படுத்த நிறுவனங்களுக்கு அழைப்பு
ஓசூர்:ஓசூரில், அனைத்து தனியார் நிறுவனங்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. தலைமை வகித்து பேசிய, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஓசூரிலுள்ள தனியார் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து (சி.எஸ்.ஆர்), ஓசூரை சுற்றியுள்ள பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு, கழிவறை வசதி, நகரை சுத்தமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, தங்களது பங்களிப்பை செய்ய கேட்டுக்கொண்டார். அப்போது, ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிப்பதால், பாதுகாப்பு கருதி, 'சிசிடிவி' கேமரா, வகுப்பறை
களுக்கு, 'ஸ்மார்ட் போர்டு'கள் ஆகியவற்றை, சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் பெற்று தர வேண்டும். அதேபோல், ஜூஜூவாடியிலுள்ள ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரையை அகற்ற, ஓசூர் மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் மனு வழங்கினார்.
கூட்டத்தில், ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா உட்பட பலர் பங்கேற்றனர்.