/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சாலை பணிக்கு தனிநபர் எதிர்ப்பு7 கிராம மக்கள் மறியல் போராட்டம் சாலை பணிக்கு தனிநபர் எதிர்ப்பு7 கிராம மக்கள் மறியல் போராட்டம்
சாலை பணிக்கு தனிநபர் எதிர்ப்பு7 கிராம மக்கள் மறியல் போராட்டம்
சாலை பணிக்கு தனிநபர் எதிர்ப்பு7 கிராம மக்கள் மறியல் போராட்டம்
சாலை பணிக்கு தனிநபர் எதிர்ப்பு7 கிராம மக்கள் மறியல் போராட்டம்
ADDED : மார் 23, 2025 01:06 AM
சாலை பணிக்கு தனிநபர் எதிர்ப்பு7 கிராம மக்கள் மறியல் போராட்டம்
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பிலிருந்து, சிப்காட்டிற்கு செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்கு பாரண்டப்பள்ளி, அயிலம்பட்டி, பூதனுார், பாரண்டப்பள்ளிபுதுார், எலந்தமரத்துக்கொட்டாய் உள்ளிட்ட, 7 கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தை வழங்கி உள்ளனர். இதில் சின்ன
பாரண்டப்பள்ளியை சேர்ந்த உமாபதி, 50, என்பவர் சாலை அமைக்க தன்னுடைய நிலத்தில் ஒரு பக்கம் மட்டும் நிலத்தை எடுத்துக்கொள்ள அனுமதித்து, மறுபக்கத்தை எடுக்க வேண்டாம் எனக்கூறி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் சாலை அமைக்க, நிலம் வழங்கிய, 7 கிராமங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் சின்னபாரண்டப்பள்ளி பகுதியில், உமாபதி நிலத்தின் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போகச் செய்தார். இதனால் போச்சம்பள்ளி சிப்காட் செல்லும் சாலையில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.