Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாநில எல்லையில் ஒரு வாரமாக எரிசாராயம், மெத்தனால் லோடுடன் காத்திருக்கும் 60 லாரிகள்

மாநில எல்லையில் ஒரு வாரமாக எரிசாராயம், மெத்தனால் லோடுடன் காத்திருக்கும் 60 லாரிகள்

மாநில எல்லையில் ஒரு வாரமாக எரிசாராயம், மெத்தனால் லோடுடன் காத்திருக்கும் 60 லாரிகள்

மாநில எல்லையில் ஒரு வாரமாக எரிசாராயம், மெத்தனால் லோடுடன் காத்திருக்கும் 60 லாரிகள்

ADDED : ஜூலை 08, 2024 05:36 AM


Google News
ஓசூர் : மஹாராஷ்டிரா, பஞ்சாப், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வட மாநி-லங்கள் மற்றும் கர்நாடகாவில் இருந்து, தமிழகம், கேரளா, புதுச்-சேரி ஆகிய மாநிலங்களிலுள்ள மது ஆலைகள், தனியார் கெமிக்கல் மற்றும் பெயின்ட் நிறுவனங்களுக்கு மெத்தனால், எரி-சாராயம் லோடு ஏற்றிய லாரிகள் செல்கின்றன. மேலும், புதுச்-சேரி, கேரளா, தமிழகத்திற்கு, மதுபானங்களை ஏற்றி லாரிகள் செல்கின்றன. கர்நாடகா மாநிலத்தை கடந்து, தமிழக எல்லை-யான ஓசூர் ஜூஜூவாடியை அடைந்தவுடன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆயத்தீர்வைத்துறையிடம் அனுமதி பெற்றால் தான், அங்கிருந்து தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கு லாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும். அதுவரை, மாநில எல்லையில் லாரிகள் காத்திருக்க வேண்டும். இதுவரை, ஓரிரு நாட்களில் ஆயத்தீர்-வைத்துறை அனுமதி வழங்கி வந்தது. கடந்த, 3 மாதமாக அனு-மதி வழங்க ஒரு வாரம் வரை ஆகிறது. அதனால், லாரிகள் ஒரு-வாரம் வரை மாநில எல்லையில் லோடுடன் காத்திருக்க வேண்டி-யுள்ளது.

அதுவரை டிரைவர்கள் லாரிகளில் படுத்தும், சமைத்தும் சாப்பிட வேண்டும். கழிவறை வசதியின்றி டிரைவர்கள் சிரமப்படுகின்-றனர். ஓசூரிலிருந்து, 55 கி.மீ., தொலைவில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள ஆயத்தீர்வைத்துறை அலுவலகத்திற்கு சென்று தான், அதற்கான ஆவணங்களை காண்-பித்து அனுமதி பெற வேண்டும். ஓசூரில் ஆயத்தீர்வை அலுவல-கத்தை அமைத்தால், உடனுக்குடன் அனுமதி வழங்க முடியும். அதையும் மாவட்ட நிர்வாகம் செய்யாமல் உள்ளது. கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில், எளிதாக லாரிகளுக்கு அனுமதி கிடைத்து விடுவதால், ஒரு சில நாட்களில் லாரிகள் சென்று விடு-கின்றன. ஆனால், தமிழக எல்லையில் ஒரு வாரம் வரை லாரிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. நேற்று மாலை வரை தமிழக எல்-லையான ஜூஜூவாடியில், 60 க்கும் மேற்பட்ட லாரிகள் தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலைகள், மேம்பாலம் மீது நிறுத்தப்பட்-டுள்ளன. இதனால், லாரி டிரைவர்கள் பாடு திண்டாட்டமாகி வரு-கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us