/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மார்பக புற்றுநோய் பரிசோதனை உபகரணங்கள் ஒப்படைப்பு மார்பக புற்றுநோய் பரிசோதனை உபகரணங்கள் ஒப்படைப்பு
மார்பக புற்றுநோய் பரிசோதனை உபகரணங்கள் ஒப்படைப்பு
மார்பக புற்றுநோய் பரிசோதனை உபகரணங்கள் ஒப்படைப்பு
மார்பக புற்றுநோய் பரிசோதனை உபகரணங்கள் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 20, 2024 07:37 AM
ஓசூர் : -ரோட்டரி கிளப் ஆப் சேலம் குகை சார்பில், 31 லட்சத்து, 41 ஆயிரத்து, 882 ரூபாய் மதிப்பில், மார்பக புற்று நோய் பரிசோ-தனை உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதை, ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு இல-வசமாக வழங்கும் விழா நடந்தது.
அனைத்து ரோட்டரி கிளப் நிர்வாகிகள் இணைந்து, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிறுவனர் தம்பி-துரை எம்.பி., மற்றும் அறங்காவலர் லாசியா தம்பிதுரை ஆகி-யோரிடம், மார்பக புற்றுநோய் பரிசோதனை உபகரணங்களை ஒப்படைத்தனர்.
எம்.பி., தம்பிதுரை பேசுகையில்,''நாட்டில் விவசாயம், கல்வி, மருத்துவம் மிகவும் முக்கியமான மூன்று துறைகளாகும்; சென்-னைக்கு அடுத்தப்படியாக ஓசூரில் தான் பல்வேறு விதமான தொழிற்சாலைகள் உள்ளன. செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்-லுாரி மருத்துவமனையில், 60 சதவீதம் இலவசமாக சிகிச்சைய-ளிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள், மருத்துவ தேவைக்காக பெங்களூரு செல்லும் நிலை இருந்தது. அதற்காக தான், ஓசூரில் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை துவங்கி சேவை செய்து வருகிறோம்,'' என்றார்.
மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவா, இருப்பிட மருத்துவ அலுவலர் பார்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.