Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு மேட்டூர் அணையில் படிப்படியாக மறையும் நந்தி சிலை

ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு மேட்டூர் அணையில் படிப்படியாக மறையும் நந்தி சிலை

ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு மேட்டூர் அணையில் படிப்படியாக மறையும் நந்தி சிலை

ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு மேட்டூர் அணையில் படிப்படியாக மறையும் நந்தி சிலை

ADDED : ஜூலை 20, 2024 07:41 AM


Google News
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று மாலை வினா-டிக்கு, 50,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெ-ருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வரு-வதால், நந்தி சிலை படிப்படியாக தண்ணீரில் மூழ்கி வருகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் வயநாடு, கர்நாட-காவின் குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா, ஹசன் உள்-ளிட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிக-ரித்துள்ளது. கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டி-யதால், அணைக்கு வரும் உபரி நீர், பாதுகாப்பு கருதி அப்படியே காவிரியில் திறக்கப்படுகிறது.

நேற்று மாலை கபினியில் வினாடிக்கு, 61,316 கனஅடி நீரும், கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 2,566 கனஅடி நீர் என மொத்தம், 63,882 கனஅடி நீர் தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்-பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டு-லுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கீட்டின்படி நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு 35,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 45,000 கன அடியாகவும், மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு, 50,000 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனால் ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்-பட்டு மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்-டுகிறது. நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் குடியிருப்புகளை தொட்டவாறு தண்ணீர் பாய்ந்தோடுகிறது. நான்-காவது நாளாக காவிரியாற்றில், குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நடைபாதையில் சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு மூடப்பட்டு, போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீர்மட்டம் 7 அடி உயர்வு

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 3ல் அணை நீர்மட்டம், 39.65 அடி, நீர் இருப்பு, 11.91 டி.எம்.சி.,யாக இருந்தது. கபினி அணையில் திறக்கப்படும் உப-ரிநீர், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணை நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 31,102 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று மதியம், 12:00 மணிக்கு, 44,963; மாலை, 4:00 மணிக்கு, 44,353 கனஅ-டியாக இருந்தது. கூடுதல் நீர்வரத்தால் நேற்று முன்தினம், 50.03 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 57 அடியாகவும், 17.83 டி.எம்.சி.,யாக இருந்த நீர்இருப்பு, 23 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்-தது. ஒரே நாளில் நீர்மட்டம், 7 அடி, நீர்இருப்பு, 5 டி.எம்.சி., அதிகரித்துள்ளது.

படிப்படியாக மறையும் நந்தி

கடந்த பிப்., 4ல், 70 அடியாக இருந்த அணை நீர்மட்டம், 5ல், 69 அடியாக சரிந்தது. அணை பண்ணவாடியில் ஜலகண்டேஸ்-வரர் கோவில் முன்புறம் உள்ள, 20 அடி உயர நந்தி சிலை வெளியே தெரியத்தொடங்கியது. கடந்த மே, 19ல் நீர்மட்டம், 49.5 அடியாக சரிந்ததால் நந்நி சிலை பீடம் வரை, முழுமையாக தெரிந்தது. தற்போது கபினி அணையில் திறக்கப்பட்ட உபரிநீர், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், நந்தி சிலை படிப்படி-யாக மூழ்க துவங்கியுள்ளது. பீடம், 6 அடி வரை நேற்று மூழ்கி-யது. நீர்மட்டம், 70 அடியாக உயர்ந்தால், சிலை முழுதும் மூழ்கி விடும்.

அணை கரையோர வறண்ட நீர்பரப்பு பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த, எள், சோளம், வெங்காயம், தினை உள்-ளிட்ட பயிர்கள் படிப்படியாக மூழ்கத்தொடங்கியுள்ளன. குறிப்-பாக, 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் பயிர்கள் மூழ்கியது விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியது. சில விவசாயிகள் நீர்-மட்டம் உயரும் முன், பயிர்களை அவசர கதியில் அறுவடை செய்தனர். மேலும் உலர்ந்த சோளப்பயிர்களை, மாட்டு தீவனத்-துக்கு டிராக்டரில் ஏற்றி கொண்டு சென்றனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் கூடுதலாக தண்ணீர் திறக்கக்கூடும் என்பதால் நேற்று காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்-கும்படி, கர்நாடகா அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்-ளது.

- நமது நிருபர் குழு -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us