ADDED : ஜூலை 20, 2024 07:36 AM
கிருஷ்ணகிரி : இந்திய
ஜனநாயக உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின், 3 புதிய குற்றவியல் சட்டங்களை
திரும்பப்பெறக்கோரி, கிருஷ்ண-கிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், இ.கம்யூ.,
கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், சுரேஷ், பிரகாஷ் உள்பட பலர்
பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்-பினர்.