/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பள்ளி மாணவிக்கு திருமணம்மேஸ்திரி உட்பட மூவருக்கு வலை பள்ளி மாணவிக்கு திருமணம்மேஸ்திரி உட்பட மூவருக்கு வலை
பள்ளி மாணவிக்கு திருமணம்மேஸ்திரி உட்பட மூவருக்கு வலை
பள்ளி மாணவிக்கு திருமணம்மேஸ்திரி உட்பட மூவருக்கு வலை
பள்ளி மாணவிக்கு திருமணம்மேஸ்திரி உட்பட மூவருக்கு வலை
ADDED : மார் 23, 2025 01:04 AM
பள்ளி மாணவிக்கு திருமணம்மேஸ்திரி உட்பட மூவருக்கு வலை
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த முசிலிகொட்டாயை சேர்ந்தவர் கமல்தாஸ், 23, கட்டட மேஸ்திரி. இவர் ஊத்தங்கரை அருகில், 9ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த, 8 மாதங்களாக பழகி வந்துள்ளார்.
கடந்த, 17ல் மாணவியை கடத்தி சென்று திருப்பத்துார் மங்குண்டமலை பெருமாள் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். தகவலறிந்த ஊத்தங்கரை சமூக நலத்துறை அலுவலர் முருகம்மாள் ஊத்தங்கரை போலீசுக்கு அளித்த புகார் படி, மாணவியை திருமணம் செய்த கமல்தாஸ், அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது தாத்தா, பாட்டி ஆகியோர் மீது வழக்குபதிந்து, மூவரையும் தேடி வருகின்றனர்.