ADDED : மார் 23, 2025 01:04 AM
இப்தார் நோன்பு திறப்பு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, பழையபேட்டை கோட்டை அருகே, இண்டி கூட்டணி சார்பில் நேற்று மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு நகர பொறுப்பாளர் அஸ்லம் தலைமை வகித்தார். த.மு.மு.க., மாவட்ட தலைவர் நுார் முஹம்மத் வரவேற்றார்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., கோபிநாத், கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., ஆகியோர் இணைந்து துவக்கி
வைத்தனர். தொடர்ந்து கிருஷ்ணகிரி தலைமை மாவட்ட அரசு காஜி கலீல் அகமத் துவா ஓதிய பின் அனைவரும் நோன்பு திறந்தனர். இதில், இண்டி கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட, 1,000க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.