/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பிக்கப் வேன்களை குறி வைத்துதிருடும் பலே திருடன் கைது பிக்கப் வேன்களை குறி வைத்துதிருடும் பலே திருடன் கைது
பிக்கப் வேன்களை குறி வைத்துதிருடும் பலே திருடன் கைது
பிக்கப் வேன்களை குறி வைத்துதிருடும் பலே திருடன் கைது
பிக்கப் வேன்களை குறி வைத்துதிருடும் பலே திருடன் கைது
ADDED : மார் 14, 2025 01:48 AM
பிக்கப் வேன்களை குறி வைத்துதிருடும் பலே திருடன் கைது
கிருஷ்ணகிரி:குருபரப்பள்ளி அருகே, பிக்கப்வேனை குறிவைத்து திருடும் வாலிபரை, போலீசார் கைது செய்து, 4 பிக்கப் வேன்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பிக்கப் வேனை கடந்த, 2ல் மர்மநபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து அவர் குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். 'சிசிடிவி' காட்சிகளை வைத்து விசாரித்த போலீசாருக்கு சம்பந்தப்பட்ட நாளில், வாலிபர் ஒருவர் வந்து செல்வதும், சிறிது நேரத்தில் பிக்கப் வேன் திருடப்படுவதும் தெரிந்தது. திருடுபோன பிக்கப் வேன், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்பகுதியிலும், 'சிசிடிவி'யில் பதிவாகியிருந்த வாலிபர் உருவம் தெரிந்தது. மேலும், கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பிக்கப் வேன் திருடு போன பகுதிகளில் எல்லாம், 'சிசிடிவி'யில் அந்த வாலிபர் உருவம் பதிவானதை கண்டு, போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
அவர் பிக்கப் வேன்களை மட்டும் குறி வைத்து திருடி வருவதையும், போலீசார் உறுதிபடுத்தினர். இதையடுத்து மேட்டுப்பாளையம் சென்ற போலீசார் பிக்கப் வேனை பறிமுதல் செய்தனர்.
பிக்கப்வேன் திருட்டுகளில் ஈடுபட்டவர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த மணிவண்ணன், 27, என்பதையும், போலீசார் கண்டறிந்தனர். நேற்று முன்தினம் குருபரப்பள்ளி அருகே சுற்றித்திரிந்த அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, 4 பிக்கப் வேன்களை பறிமுதல் செய்தனர். எங்கெல்லாம் அவர் கைவரிசையை காட்டியுள்ளார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். நீதிமன்ற ஆஜருக்கு பின், அவர் தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டார்.